மாவீரர் விபரம்.
வீரவணக்கம்.
fredom
அறிக்கைகள்.
தாலாட்டு
எரிமலை
marcy
மூதாளர்
தமிழீழத்தனியரசை அங்கீகரி
பன்னாட்டுச் செய்திகள்
சேவை
சேர்பியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள முக்கியத்துவம் மிக்க பொதுத் தேர்தல் ஆரம்பம்
12.05.2008 / நிருபர் எல்லாளன்
சேர்பியாவின் முக்கியத்துவம் மிக்க பொதுத் தேர்தல், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. சேர்பியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா அல்லது தனித்து விடப்படுமா என்பது குறித்து தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
// விரிவாக
ஐ.நாவின் உணவு உதவிகளை மியன்மார் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது
10.05.2008 / நிருபர் எல்லாளன்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் இரண்டு விமானங்களில் அனுப்பிவைத்துள்ள உணவு உதவியை மியன்மார் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
// விரிவாக
பெய்ரூத்தின் மேற்குப் பகுதியை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் கைப்பற்றியுள்ளது
10.05.2008 / நிருபர் எல்லாளன்

லெபனானின் தலைநகர் பெய்ரூத்தின் மேற்குப் பகுதியை ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
// விரிவாக
உலகில் அதிநீளமான கடல்பாலம் சீனாவில் நிர்மாணிப்பு!
09.05.2008 / நிருபர் எல்லாளன்

வாகன போக்குவரத்துகான உலகின் அதிநீள கடல்பாலம் சீனாவில் அமைக்கபட்டுள்ளது.சீனாவில் யாங்சீ ஆறு டெல்டா பகுதியில் உலகின் அதிநீள கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
// விரிவாக
36 கைதிகளைச் சுட்டுக்கொன்றது மியன்மார் இராணுவம்
08.05.2008 / நிருபர் எல்லாளன்
நர்கீஸ் சூறாவளி, மியான்மாரை கடுமையாக தாக்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இன்சேன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 கைதிகளை மியான்மார் இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
// விரிவாக
மியன்மார் சூறாவளி: 100,000 பேர் உயிரிழப்பு, பாரிய மனிதாபிமான நெருக்கடியில் மக்கள்
08.05.2008 / நிருபர் எல்லாளன்

மியன்மார் சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினி மற்றும் தொற்றுநோய் அபாயத்துக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,000 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
// விரிவாக
வடக்கு கரோலினா ஒபாமா வெற்றி - ஹில்லாரிக்கு இன்டியானா
07.05.2008 / நிருபர் எல்லாளன்

வாஷிங்டன்: வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். இன்டியானா மாகாணத்தில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.
// விரிவாக
அமெரிக்கா ரஷியா இடையே அணுதிட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
07.05.2008 / நிருபர் வானதி
அமெரிக்காவும், ரஷியாவும் இராணுவம் சாராத அணுத்திட்ட உடன்பாடு ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. ரஷியாவின் அதிபரான விளாடிமிர் புடின் பதவிக் காலத்தின் இறுதி நாளான இன்று இந்த இந்த ஒப்பந்த்தம் கையெழுத்தாகியது. இந்த உடன்பாட்டின் மூலம் ரஷிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான தொழிநுட்பப் பரிமாற்றமும் பரஸ்பர வர்த்தகமும் ஏதுவாகும்.
// விரிவாக
உதவிப் பணிகளில் சிக்கல்
07.05.2008 / நிருபர் வானதி
பர்மாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க நாட்டின் இராணுவ அரசு தயங்குகிறது என்று ஐ.நாவின் பர்மாவுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுகான ஒருங்கிணைப்பாளரான கிறிஸ் கே, கூறியுள்ளார்.
// விரிவாக
டார்பூர் வான் தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 சிவிலியன்கள் பலி
06.05.2008 / நிருபர் வானதி

சுடானின் டார்புர் பிராந்தியத்தில் ஞாயிறன்று நடந்த வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, அங்கு பணியாற்றும் உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. அதில் 7 பேர் சிறார்களாவர். அவர்களது பள்ளிக்கூடம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானதில் அவர்கள் கொல்லப்பட்டனர்
// விரிவாக
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
06.05.2008 / நிருபர் வானதி

இந்தியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்யும் வீதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அந்த விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
// விரிவாக
மியன்மாரில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 பேராக உயர்வு
06.05.2008 / நிருபர் எல்லாளன்

மியன்மாரைத் தாக்கிய "நர்கிஸ்' சூறாவளி காரணமாக இறந்தவர்களின் தொகை சுமார் 10,000 பேராக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் அறிவித்துள்ளது.
// விரிவாக
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
05.05.2008 / நிருபர் வானதி
மியன்மாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ள அதேவேளை, ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான் அருகே வங்காள விரிகுடாவில் உருவாகி வடகிழக்காக நகர்ந்த இச்சூறாவளி, நேற்று மாலை மியன்மாரைப் பலமாகத் தாக்கியது.
// விரிவாக
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் அமைதி ஏற்படலாம் -அமெரிக்கா நம்பிக்கை
05.05.2008 / நிருபர் வானதி
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே இந்த ஆண்டு முடிவுக்குள் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்புள்ளது என்றே அமெரிக்கா கருதுகிறது என அமெரிக்க அரசுத்துறை செயலர் கண்டலீஸா ரைஸ் அவர்கள் கூறியுள்ளார். பாலஸ்த்தீன அதிபர் முகமது அப்பாஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை கண்டு பேசிய பிறகு மேற்குக்கரையின் ரமல்லா நகரில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
// விரிவாக
ரஷ்ய அமைதிப்படை வலுப்படுத்தலை நேட்டோ குறை கூறுகிறது
01.05.2008 / நிருபர் வானதி

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற இரண்டு பிரதேசங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேட்டியா ஆகிய பகுதிகளில் தனது அமைதிகாக்கும் படையை வலுப்படுத்தும் ரஷியாவின் திட்டத்தினை நேட்டோ இராணுவ கூட்டணி குறை கூறியுள்ளது.
// விரிவாக
உணவுப் பற்றாக்குறையினால் ஆப்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்வு
01.05.2008 / நிருபர் எல்லாளன்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான ஆப்கானிய மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
// விரிவாக
இராக்கிய மோதல்களில் 28 தீவிரவாதிகள் பலி
30.04.2008 / நிருபர் வானதி

இராக்கின் தலைநகர் பாக்தாதின் சதர் மாவட்டதில், மீண்டும் வெடித்த மோதல்களில், ஷியா பிரிவு மதகுருவான, மொக்ததா அல் சாதருக்கு விசுவாசமான குறைந்தது 28 தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் இராக்கிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
// விரிவாக
உலக உணவு நெருக்கடியைக் கையாள ஐ.நா செயலணிக்குழு
30.04.2008 / நிருபர் வானதி

உலக உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு செயலணிக்குழுவை ஏற்படுத்தவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் ஐக்கிய நாடுகள் நிறுவன முகவராண்மைகளின், தலைவர்களின் சந்திப்பு ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
// விரிவாக
பாசுமதி அரிசிக்கு வரி விதிக்க இந்தியா முடிவு
30.04.2008 / நிருபர் வானதி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பாசுமதி அரிசிக்கு வரி விதிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அங்கு, ஒரு டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இனி நூறு டாலர் வரி கட்ட வேண்டும். இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்
// விரிவாக
பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க 100 பில்லியன் டாலர் வரித் தள்ளுபடி -புஷ்
29.04.2008 / நிருபர் வானதி

அமெரிக்காவில் நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு 100 பில்லியன் டாலர்கள் வரித் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு ஆரம்பித்துள்ளது.
// விரிவாக
இன்றைய நாள்